பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு!
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது, கோதுமை மாவி்ன் விலையும் குறைக்கப்பட்டால் இவ்வாறு பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை மா இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் செயற்பட வேண்டுமென அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதியை நிறுத்தாமல் ஒரு கிலோ மாவின் விலை 180 முதல் 170 ரூபா வரை குறைக்கப்பட்டிருந்தால், ஒரு றாத்தல் பாணின் விலை 10 ரூபாவுக்கு மேல் குறைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.