மீண்டும் இந்தியா பயணமாகும் ரணில்

மீண்டும் இந்தியா பயணமாகும் ரணில் | Ranil S India Visit

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் அவர் ஈடுபடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது பல விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு மாதங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டாவது தடவையாக இந்தியாவிற்கு மேற்கொள்ளும் விஜயம் இதுவாகும்.

இதன்படி, கடந்த நவம்பர் 21 ஆம் திகதியும் ரணில் இந்தியாவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்கத்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button