யாழில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு !

 

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

அச்சுவேலியில் 175.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 170.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 139.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் மீசாலையில் 133 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், தொல்புரத்தில் 118 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், யாழ்ப்பாணம் மத்தியில் 68.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், கோட்டை பகுதியில் 58.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், சாவகச்சேரியில் 34.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், அம்பனில் 24.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நயினாதீவில் 6.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், நெடுந்தீவில் 2.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மேலும் கிளிநொச்சியில் 99.9 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் ஆனையிறவில் 56.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அக்கராயனில் 128.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது – என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button