சிவப்பு சீனி மீதான வற் வரியை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
சிவப்பு சீனி மீதான வற் வரியை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (06.12.2024) உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் போது ஒரு கிலோ சிவப்பு சீனி 300 ரூபாவாகவும் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 220 ரூபாவாகவும் காணப்படுகின்றன.
இதேவேளை இலங்கைக்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு வற் வரி அறவிடப்படுவதில்லை.
ஆனால் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பழுப்பு சர்க்கரைக்கு 18 சதவீதம் வற் மற்றும் 2.5 சதவீதம் வரி விதிக்கப்படுகின்றது.
மேலும் சிவப்பு சீனி அத்தியாவசியமற்ற பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளை சீனி அத்தியாவசிய பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.