குறைக்கப்படவுள்ள விசா கட்டணம்: வெளிநாடு ஒன்றின் புதிய முயற்சி

குறைக்கப்படவுள்ள விசா கட்டணம்: வெளிநாடு ஒன்றின் புதிய முயற்சி | Visa Price In China From Dec

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளில் சீனா தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், உள்வரும் பயண விசாக்களுக்கான கட்டணத்தை தற்காலிகமாக 25 வீதத்தால் குறைப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை சீனாவின் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கும், எளிதாக எல்லை தாண்டிய பயணத்திற்கு அதிக வசதியை வழங்குவதற்கும் தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்” என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button