தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு!

நேற்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்து கட்டணங்களை 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி மாகும்புர-காலி இடையிலான புதிய பேருந்து கட்டணம் 930 ரூபாவாகவும் மாகும்புர-மாத்தறைக்கு இடையிலான புதிய பேருந்து கட்டணம் 1170 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடுவலை-மாத்தறைக்கு இடையிலான புதிய சொகுசு பேருந்து கட்டணம் 1260 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு-கதிர்காமம் இடையிலான புதிய பேருந்து கட்டணம் 1300 ரூபாவாகும்.

இதன்படி அரை சொகுசு பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button