பதிவு செய்யப்பட்ட கார்களுக்கும் வரி விதிக்கப்படும் அபாயம்
பதிவு செய்யப்பட்ட கார்களின் விற்பனையில் மீண்டும் வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய வரிக் கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வாகனங்களை விற்பனை செய்பவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.