அரிசி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரிசி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் | Mahinda Amaraweera About Rice Import Srilanka

நாட்டில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

அத்துடன் நாட்டில் தேவையான அரிசி உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி இறக்குமதி விவகாரம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

1984 ஆம் ஆண்டு அரிசி பதப்படுத்தும் பணிக்காக கட்டப்பட்ட அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான இடம் அழிக்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபா செலவில் புல்னேவ அரிசி பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டதன் பின்னர், அதன் மூலம் பெருமளவிலான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் 5 ஆண்டுகளாக தொடர்ந்து அரிசி பதப்படுத்தும் இந்த இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே நாட்டில் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button