நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
அத்துடன், டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, 2024 ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 3.3% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், டிசம்பர் 2023 இல் இந்த எண்ணிக்கை 0.3% என அறிவிக்கப்பட்டது.