பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | Announcement School Holiday In Srilanka Moe

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை வெளியாகியுள்ளது.

குறித்த அறிவித்தல் இன்று கல்வியமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி முதல் முதல் மார்ச் மாதம் 14ம் திகதி வரை முதற் கட்டம் இடம்பெறும். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை இரண்டாம் கட்டம் இடம்பெறும்.

ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் மே மாதம் 9ம் திகதி வரை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணையானது மே மாதம் 14ம் திகதி முதல் ஓகஸ்ட் 07ம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 17ம் திகதி வரை முதலாம் கட்டம் இடம்பெறவுள்ளது.

நவம்பர் மாதம் 17ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ம் திகதி வரை இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button