பாடசாலைகளுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு : ரணில் விடுத்துள்ள அழைப்பு
மாணவர்களின் தேவைகள் தொடர்பிலான முன்மொழிவுகளை தயார் செய்து மாணவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், அதற்கேற்ப மாணவர்களின் தேவைகள் குறித்து யோசனை பெற முடியும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ரத்னபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (10) அதிபர் செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
மாணவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர், பாடசாலைகளுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இது என சுட்டிக்காட்டி இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்கால தலைமைத்துவம் இந்த மாணவர் நாடாளுமன்றங்களின் ஊடாகத் தான் உருவாகும் என குறிப்பிட்ட அதிபர், அந்த செயற்பாடுகளுக்கு இந்த அனுபவங்கள் நல்ல உறுதுணையாக அமையும் எனவும் தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் படி செயற்படும் மாணவர் நாடாளுமன்றமானது சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.