சூரிய சக்தி மின் உற்பத்தியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நன்மை

சூரிய சக்தி மின் உற்பத்தியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நன்மை | 1251 Mw Solar Power Ministry Announced

சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள்  இலங்கை, மொத்த கொள்ளளவான 1,251 மெகாவோட் திறனை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekere) தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்த வரைபடத்தை வெளியிட்டு கருத்துக்களை முன்வைத்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஏற்கனவே 944 மெகாவோட்கள், மேற்கூரை சூரிய மின்சக்தி மூலம் தேசிய மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், 156 மெகாவோட்கள், நிலத்தடி சூரிய மேம்பாட்டிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் கூரை மேம்பாட்டிலிருந்து 1,044 மெகாவோட் மின்சாரத்தை  இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், நீண்ட கால உற்பத்தித் திட்டத்தில், அடுத்த 4 ஆண்டுகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 150 மெகாவோட் என்ற அளவில் மேற்கூரை சூரிய மின் உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 132 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button