செங்கடலில் தொடரும் அச்சுறுத்தல்: பாதுகாப்புகளுக்காக களமிறங்கும் இலங்கை

செங்கடலில் தொடரும் அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக களமிறங்கும் இலங்கை | Terrorist Activity By Houthi Militias The Red Sea

செங்கடலில் ஹவுதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கப்பல்கள் புறப்படும் திகதி இன்னும் வெளியிடப்படவில்லை எனவும், மேலும், இந்த கப்பல் ஒன்றில் கிட்டத்தட்ட நூறு மாலுமிகள் பணிபுரிகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

மேலும், இந்த கப்பல்களில் ஹெலிகொப்டர்கள் தரையிறங்கும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இலங்கை கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று செங்கடலுக்கு அனுப்பப்படும் என அறிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியிருந்ததாவது, “உக்ரைன் மற்றும் காசாவில் அதிக போர்கள் இடம்பெறுகின்றன.

இதனால், பொருட்களின் விலை அதிகரிக்கலாம். இப்போது, ஹவுதிகள் செங்கடலில் உள்ள கப்பல்களை நோக்கி ஏவுகணைகளை வீசுவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல்கள் செங்கடலில் இருந்து வராமல் தென்னாப்பிரிக்காவைச் சுற்றி வந்தால் பொருட்களின் விலை அதிகரிக்கும்.

எனவே, ஹவுதி திட்டத்தில் இருந்து அவர்களைப் பாதுகாக்க இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்பவும் ஒப்புக்கொண்டுள்ளோம்.

இவ்வாறான கப்பலை இரண்டு வாரங்களுக்கு வைத்திருக்க 250 மில்லியன் ரூபா செலவாகும். நாங்கள் கடினமான இடங்களில் இருக்கிறோம். இது பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button