உணவுப்பொருட்களின் விலை குறைப்பு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உணவுப்பொருட்களின் விலை குறைப்பு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Essential Goods Price Reduce Minister Announce

இலங்கையில் எரிபொருள் விலையை குறைத்தது போன்று உணவுப் பொருள் விலைகளும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே (Nalin Hewage) தெரிவித்துள்ளார்.

காலியில் (Galle) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்டது போன்று, எதிர்காலத்தில் உணவுப்பொருட்கள் மீதான வரிகளும் குறைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்வாறு விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அதிகாரபூர்வ இல்லங்களை பெற்றுக்கொள்ளாது சாதாரண வாகனங்களை பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அமைச்சர்களுக்கு வாகனங்கள் இன்றி செயற்பட முடியாது எனவும் இதனால் சாதாரண வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button