வெளிநாடொன்று இலங்கைக்கு வழங்கும் அதிநவீன கண்காணிப்பு விமானம்

வெளிநாடொன்று இலங்கைக்கு வழங்கும் அதிநவீன கண்காணிப்பு விமானம் | Flight Subsidized Australian Govt To Sri Lanka

அவுஸ்திரேலியாவிலிருந்து அதிநவீன பீச் கிங் 350 என்ற கண்காணிப்பு விமானம் சிறிலங்கா விமானப்படையினரால் பெறப்பட உள்ளது.

குறித்த விமானமானது, அவுஸ்திரேலிய அரசின் மானியமாக நாளை (12)  இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் சிறப்புத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் இணைக்கப்படும் என தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த கண்காணிப்பு விமானம் இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானமொன்று ஆகும்.

கடல் மற்றும் கடலோர கண்காணிப்பு நடவடிக்கைகள், புலனாய்வு கண்காணிப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்,  இலங்கையின் வான்வெளி மற்றும் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் கடல் மாசுபாட்டைக் கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை விரிவுபடுத்த குறித்த விமானம் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இதற்கு முன்னராக அமெரிக்காவிலிருந்து பீச் கிராஃப்ட் விமானம் ஒன்று மானியமாக இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button