ஆயுதப்படைக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு.!

அனைத்து ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை அநுர வெளியிட்டுள்ளார்.

அண்மையில், அநுர பொது அமைதியை பேணுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிட்டமை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் உள்ள இந்த நடைமுறை, தொடர்ந்து வந்த அரசாங்கங்களாலும் பின்பற்றப்படுவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன்(Ambika Satkunanathan) சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், ஜனாதிபதியின் இந்த முடிவு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன் பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகளை அழைக்கும் முடிவு தேவையற்றது மற்றும் இது இராணுவமயமாக்கலின் தொடர்ச்சி எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button