2024 ஐசிசி ரி20 உலகக் கோப்பை இலங்கை அணி அறிவிப்பு!

sri lanka t20 world cup squad 2024

20 அணிகள் பங்கேற்கும் 2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை(Icc world cup 2024) தொடருக்கான அணியை நேற்று (09)  சிறிலங்கா கிரிக்கெட்(SL Cricket) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை தொடரானது, அமெரிக்கா (US) மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் (West Indies) ஜூன் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,  இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க(wanindu Hasaranga) இடம்பெற்றுள்ளதுடன் பதில் தலைவராக சரித் அசலங்க(Charith Asalanka)தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட  இலங்கை அணி எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை அணியை பெருமைப்படுத்தும் விதத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியானது இலங்கை கிரிக்கெட் இரசிகர்களால் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button