இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : மதிப்பீட்டை உடன் ஆரம்பிக்க உத்தரவு
நாடளாவிய ரீதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு பெரும் போகத்தில் செய்கை பண்ணப்பட்ட சுமார் 61,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவைச் சந்தித்துள்ளன.
எனவே அழிவடைந்த நெற்பயிர்களின் சேத மதிப்பீட்டை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சிறு போகத்தில் வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிட்டது போல், விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.