3 வது டெஸ்ட் போட்டியை வென்ற இலங்கை!

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அந்தவகையில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார்.

பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய  இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக Ollie Pope 154 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணிசார்பாக
Milan Rathnayake 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 1 ஆவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய  இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக Dhananjaya de Silva 69 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி அணிசார்பாக Josh Hull மற்றும் Olly Stone ஆகியோர் தலா 3 வீக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

மேலும் போட்டியில் தமது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து  அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Jamie Smith 67 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 4 விக்கெட்டுக்களையும், Vishwa Fernando 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக  219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் ஊடாக 10 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button