வங்கியில் வைப்புச் செய்யும் பணத்தை மீளப் பெறும் போது 50 ரூபா வரையில் வரி

வங்கியில் சேமிப்பு கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை மீளப் பெறும் போது 50 ரூபா வரையில் வரி அறவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்கி புத்தகம் மூலம் இரண்டு லட்சம் ரூபாவிற்கு குறைந்த தொகையை மீளப் பெறும் போது 15 ரூபா முதல் 50 ரூபா வரையில் வணிக வங்கிகள் வரி அறவீடு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் சேமிப்பு கணக்கு புத்தகத்தைப் பயன்படுத்தி 50 ரூபா பணம் வங்கியிலிருந்து மீளப் பெற்றுக்கொண்டால் அதற்கு நிகரான தொகை வரியாக அறவீடு செய்யப்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.

நாட்டின் முன்னணி வணிக வங்கியொன்று பணம் மீளப் பெறும் போது 50 ரூபா வரி அறவீடு செய்வதுடன் மற்றுமொரு வங்கி 15 ரூபா வரி அறவீடு செய்கின்றது.

50 ரூபா அறவீடு செய்யும் வங்கியிடம் இது பற்றிய வினவிய போது, ஏ.ரீ.எம் மூலம் பணம் மீளப் பெறும் போது இவ்வாறு வரி அறவீடு செய்யப்படுவதில்லை எனவும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் ஊடாக 2 லட்சத்திற்கும் குறைந்த தொகை மீளப் பெறும் போது மட்டும் வரி அறவீடு செய்வதாக தெரிவித்துள்ளது.

வங்கி அட்டை இல்லாதவர்கள் மாதமொன்றுக்கு 10 தடவைகள் பணம் மீளப் பெற்றால் அவர்கள் 500 ரூபா வரையில் செலுத்த நேரிடும் எனவும் இது அநீதியானது என வாடிக்கையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button