வரி செலுத்த தவறியவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை உரிய குழு ஆராயும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதிவு செய்து வரி செலுத்தாத வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் வரிக் கோப்புகளைத் திறக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆண்டுக்கு 12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும், ஏனைய நபர்கள் வரி செலுத்தும் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.