டின் மீன்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தல்!
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களை கொள்வனவு செய்யும் போது எஸ்.எல்.எஸ் (SLS) என்ற இலங்கை தர நிறுவனத்தின் தரச்சான்று உள்ளவற்றை மாத்திரமே பொது மக்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் (05.03.2023) விடுத்துள்ள இந்த அறிவிப்பில், தரமற்ற உற்பத்திகள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க முடியும் எனவும் இலங்கை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் உள்ள தரமற்ற டின் மீன் உற்பத்தி தொடர்பில் அண்மையில் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதன்பின்னர் சந்தையில் உள்ள தரமற்ற டின் மீன்கள் தொடர்பில் நுகர்வோருக்குத் தெளிவுபடுத்துவதற்காக இலங்கை நுகர்வோர் அதிகார சபை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் வைத்தே அதன் தலைவர் அசங்க ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற டின் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.