மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: கட்டாயமாக்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் தொடர்புடைய TIN எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜெனரல் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவைகளை அணுகும்போது தனிநபர்கள் அந்தந்த கவுண்டர்களில் தங்கள் TIN ஐ சமர்ப்பிக்க வேண்டும்.