நாட்டிற்கு 6 நாட்களில் 23,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு செப்டம்பர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

முதல் ஆறு நாட்களில் 23 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் இருந்து நாட்டிற்கு அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 188 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து ஆயிரத்து 693 நபர்களும், ஜேர்மனியிலிருந்து ஆயிரத்து 513 பேரும், ரஷ்யாவிலிருந்து ஆயிரத்து 434 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து ஆயிரத்து 127 பேரும் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், சீனாவில் இருந்து ஆயிரத்து 114 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 136,405 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 927,214 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button