வடக்கு தொடருந்து பாதையில் இரு தொடருந்து சேவைகள் இரத்து

வடக்கு தொடருந்து பாதையில் இரு தொடருந்து சேவைகள் இரத்து | Two Trains Cancelled Today In Northen Railway Path

வடக்கு தொடருந்து பாதையில் இன்று (09) இரண்டு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கணேவத்த மற்றும் வெல்லாவ இடையேயான தொடருந்த பாதையில் உள்ள பாலம் ஒன்றில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் முன்னெடுப்பதன் காரணமாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் தொடருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 8.20 மணிக்கு மஹாவ சந்திக்கு புறப்படவிருந்த தொடருந்து மற்றும் காலை 10.50 மணிக்கு புறப்படவிருந்த தொடருந்து ஆகியனவே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button