Truecaller பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Truecaller பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Important Notice For Truecaller Users Tamil

ட்ரூகாலர் (Truecaller) எனும் செயலியானது பெருமளவிளான மக்கள் பயன்படுத்தும் ஒரு நம்பகத்தன்மையுடைய செயலியாக இருக்கின்றது. அந்த வகையில் தற்போது புதிய அம்சம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

ட்ரூகாலர் (Truecaller) நிறுவனமானது அதன் செயலியில் கால் ரெக்கார்டிங் (Call Recording) அம்சத்தை சேர்த்துள்ளது. முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைத்தது, ஒருகட்டத்தில் பாதுகாப்பு (Security) காரணங்களுக்காக இந்த அம்சம் நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்து இருந்தாலும் சரி, ட்ரூகாலர் ஆப் இருந்தால், மற்றவர்களுடன் பேசும் போது அதை ரெக்கார்ட் செய்ய முடியும், அதேபோல மற்றவர்களாலும் நீங்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்ய முடியும்.

முன்னரே குறிப்பிடப்படி, இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கும்.

ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், உள்ள ட்ரூகாலர் டயலரை அணுகும் போதே அங்கே கால் சேமிப்பு பொத்தான் தெரியும்.

ஒருவேளை ஐஓஎஸ் பயனராக இருந்தால், அதாவது ஐபோன் வைத்து இருந்தால் ஆப்பிளின் சில கட்டுப்பாடுகள் காரணமாக இதே அம்சம் சற்றே வித்தியாசமாக அணுக கிடைக்கும்.

ட்ரூகாலர் ஆப்பிற்கு சென்று ‘ரெக்கார்டிங் லைன்’ நம்பரை டயல் செய்து, பின்னர் அதில் ஒரு கால்-ஐ ஆட் செய்து, இரண்டையும் ஒன்றிணைக்க (Merge) செய்ய வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம், ஐபோன் வழியாக மேற்கொள்ளும் அழைப்புகளையும் கூட சேமிக்க செய்ய முடியும்.

குறிப்பிட்ட அழைப்பை பேசி முடிந்ததும், ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோவானது ஒரு ஃபைல் ஆக உங்களுக்கு கிடைக்கும்.Truecaller பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Important Notice For Truecaller Users Tamil

வெளிச்செல்லும் அழைப்புகளில் (Outgoing Calls) மட்டுமே உள்வரும் அழைப்புகளுக்கும் (Incoming Calls) இதே செயல்முறை தான்.

இருப்பினும், இந்த கால் ரெக்கார்டிங் அம்சமானது ட்ரூகாலர் ஆப்பின் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு (Premium Subscribers) மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும் என்று ட்ரூகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனுடன் சேர்த்து அழைப்புகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை (Transcripts) உருவாக்கும் ஏஐ ஆதரவையும் (AI Support) அவர்கள் பெறுவார்கள். அதுமட்டுமின்றி மேற்கண்ட அம்சங்கள் முதலில் அமெரிக்காவில் உள்ள ட்ரூகாலர் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு வெளியிடப்படும், பின்னர் கூடிய விரைவில் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button