இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று (30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் இன்று (30) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் இதனைத் தெரிவித்துள்ளது.