துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் – 50 ஆயிரத்தை அண்மித்த பலி எண்ணிக்கை!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான விஜயத்தின் பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர ஸ்தானமான கஹரஸ்மன்மராஸ் பகுதிக்கு சென்றுள்ளார்.
50 ஆயிரத்தை அண்மித்த பலி எண்ணிக்கை!உலகளவில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Body Srilankan Woman Turkey Earthquake Recovered
இது தொடர்பில் அவர் கூறுகையில்,இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பதை துல்லியமாக கூற முடியாது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது.”என கூறியுள்ளார்.
துருக்கியில் மட்டும் மீட்புப் பணிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 8,294 பேரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 32,000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 42.8 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைக் கோரியுள்ளது.