துருக்கிக்கு மருத்துவர்கள், பொறியியலாளர்களை அனுப்பி வைக்க இலங்கை திட்டம்!
நில அதிர்வினால் பேரழிவினை சந்தித்துள்ள துருக்கிக்கு இராணுவ மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரை அனுப்பி வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதாபிமான பணிகளில் பயிற்றப்பட்ட இராணுவத்தினர் இந்த பணிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
பிரதமர் அலுவலகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய துருக்கிக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நேற்றைய தினம் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
துருக்கிக்கு உதவும் விசேட குழுவிற்கு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவிற்கு உதவிகளை வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.