மீண்டும் மாற்றப்பட்ட டுவிட்டர் லோகோ! எலான் மஸ்கின் திடீர் முடிவு
டுவிட்டர் ஆரம்பித்த காலத்திலிருந்தே குருவி என்ற லோகோ பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென நாய் லோகோவை எலான் மஸ்க் மாற்றினார்.
அவருடைய இந்த முடிவுக்கு ட்விட்டர் பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் தற்போது மீண்டும் குருவி லோகோ பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகோவை மாற்றிய எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டொலர் கொடுத்து வாங்கினார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டாக் காயின் என்ற கிரிப்டோ கரன்சி லோகோவான நாய் லோகோவை எலான் மஸ்க் டுவிட்டருக்கு வைத்தார்.
இந்த புதிய லோகோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மீண்டும் குருவி டுவிட்டர் லோகோவாக எலான் மஸ்க் மாற்றி உள்ளார்.