ட்விட்டர் பயனர்களுக்கான எலான் மஸ்கின் விசேட அறிவித்தல்!
ட்விட்டரில் விளம்பரங்கள் மூலாக பணம் சம்பாதிக்கும் முறைமையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ட்விட்டரில் வெரிஃபைட் கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஒக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில், புளூ டிக் பயனர்களின் கணக்குகளில் அவர்கள் பதிவிடும் ட்வீட்களுக்கு வரும் ரிப்ளை பகுதியில் விளம்பரங்களை இடம்பெற செய்வதுடன், அதற்கான குறிப்பிட்ட தொகையை பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக, முதற்கட்ட நடவடிக்கையாக 5 மில்லியன் டொலர்கள் ஒக்கப்பட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.