சீறிப்பாயும் உக்ரைன் படைகள் – ரஷ்யாவிற்கு விழுந்த அடுத்த அடி..!
கிரைமியா தீபகற்பத்தையும் உக்ரனையும் இணைக்கும் பாலமானது உக்ரைனின் தாக்குலினால் சேதமடைந்துள்ளது என ரஷ்ய அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு நடந்த தாக்குதல் உக்ரைன் சோங்கார் பாலத்தை தாக்கியது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட உக்ரேனிய ஆளுநர் சேர்ஜி அக்சினோவ் தெரிவித்துள்ளார்.
சோங்கார் பாலம், உக்ரைனின் தென் பிராந்திய மாகாணமான கேர்சோனையும் கிரைமியாவையும் இணைக்கிறது.
கேர்சோன் பிராந்தியமும் தனக்குரியது என கடந்த வருடம் ரஷ்யா அறிவித்திருந்தது. அதன் பின்னர், அப்பிராந்திய தலைநகரை உக்ரைன் மீளக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது