உலக பேரழிவிற்கு திட்டமிடும் ரஷ்யா! உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி
உலக பேரழிவுக்கான போரை ரஷ்யா நடத்தி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்மாயில் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த உக்ரைனின் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமடைந்தன.
இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி காணொளி வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி, சர்வதேச உணவு சந்தையில் பொருட்களின் விலை உயர்ந்து, உணவு விநியோகம் பாதிக்கப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் விருப்பம் என்று கூறியுள்ளார்.
மேலும் உக்ரைனுடனான கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரஷ்யா மறுத்துவிட்டதால், உக்ரைனில் உள்ள தானிய கிடங்குகளில் லட்சக்கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.