உக்ரைன் போரில் கைகோர்க்கவுள்ள முக்கிய நாடு..!
பிரித்தானியாவுடன் இணைந்து நார்வே-யும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒரு வருடமாகியும் தீவிரமடைந்து வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கியிருந்தது.
இதையடுத்து ஸ்ட்ரோம் ஷடோ நீண்ட தூர ஏவுகணைகளை(Storm Shadow long-range missiles) உக்ரைனுக்கு வழங்குவது என்பது போரின் நிலைமைகளை மேலும் தீவிரப்படுத்தும் என ரஷ்யா எச்சரித்தது.
இந்நிலையில், பிரித்தானியாவுடன் இணைந்து உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க இருப்பதாக நோர்வே தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பிரித்தானியாவுடன் இணைந்து, நோர்வே 8 M270 ஏவுகணை அமைப்பு மற்றும் 3 ஆர்தர் பீரங்கி ரேடார்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.