இலங்கைக்காக களமிறங்கிய ஐக்கிய நாடு சபை
இலங்கை கடந்த ஆண்டு மிகமோசமான சமூக, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அதன்விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த 2.9 மில்லியன் மக்களுக்கு அவசியமான உடனடி மனிதாபிமான உதவிகளைத் தாம் வழங்கியதாகவும் மொத்தமாக 7 மில்லியன் மக்களுக்கு உதவும் நோக்கில் 123.5 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சமூக, பொருளாதார நிலைவரம் மற்றும் அதில் நிலவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவுதற்கும் ஐக்கிய நாடுகள் சபையாலும் அதன் கிளை அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பவற்றை உள்ளடக்கி இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.