ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் ஜூன் 19 இல் ஆரம்பம்

United Nations Human Rights Council will hold its 53rd session / Geneva

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர சமர் என கருதப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கையின் மனித உரிமைகளின் நிலை தொடர்பில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி அமர்வில் வாசிக்கப்படவுள்ளது.

இம்மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெற உள்ள இக்கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும்,

பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகள் என்பன மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button