இரசாயன உர தடையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு

இரசாயன உர தடையினால் கடந்த வருடம் அரிசி மற்றும் தேயிலை உற்பத்தி குறைவினால் இருபத்து நான்காயிரத்திற்கும் அதிகமான கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விசேட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இதனால் அந்த ஆண்டில் ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரியாக ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரசாயன உர தடையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பேராசிரியர் | 24 000 Crore Loss Ban On Chemical Fertilizers

கடந்த வருட காலபோக நெல் உற்பத்தி, பதினொரு இலட்சத்து முப்பதாயிரத்து நூற்று அறுபத்து நான்கு மெட்ரிக் தொன்களாலும் (36 வீதம்) சிறுபோக பருவத்தில் அறு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி இருபதாலும் குறைந்துள்ளது.

அதன்படி அந்த இரண்டு பருவங்களிலும் உற்பத்தியானது பதினேழு இலட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒரு மெட்ரிக் தொன்.

தேயிலை உற்பத்தி

இரசாயன உர தடையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பேராசிரியர் | 24 000 Crore Loss Ban On Chemical Fertilizers

இதேவேளை இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தேயிலை உற்பத்தி 47000 மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளதாக தெரிவித்த பேராசிரியர் இது முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 16 வீதம் குறைவு எனவும் தெரிவித்தார்.

தேயிலை உற்பத்தியில் இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட நிதி இழப்பு ஆறாயிரத்து எண்பத்து நான்கு கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இறப்பர் ஏற்றுமதி

இரசாயன உர தடையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பேராசிரியர் | 24 000 Crore Loss Ban On Chemical Fertilizers

இதேவேளை, இறப்பர் ஏற்றுமதி 1.8 வீதத்தாலும், தேங்காய் ஏற்றுமதி 5.9 வீதத்தாலும், மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி 18.9 வீதத்தாலும், மரக்கறி ஏற்றுமதி 6.6 வீதத்தாலும் குறைந்துள்ளதாக அத்துகோரள தெரிவித்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் கடந்த அரசாங்கம் கரிம உரங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் எண்ணாயிரத்து நானூற்று எண்பது கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் ஆய்வில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button