வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய பொருட்கள்
சுகாதாரச் செலவைக் குறைப்பதற்காக, சுதேச மருத்துவம் தொடர்பான ஆயுர்வேத பொருட்கள் மற்றும் தொழில்களை பெறுமதிசேர் வரியிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவிய்லாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுதேச வைத்திய முறையைப் பாதுகாப்பதற்கும் விசேட பணியகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் முயற்சியின் கீழ் உள்ளுர் மருத்துவத் துறையில் ஆயுர்வேத சுகாதார பராமரிப்பு நிலையங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உள்ளுர் மருத்துவத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.