வாகன உதிரிப் பாகங்களின் விலை பாரியளவில் உயர்வு

வாகன உதிரிப் பாகங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பஞ்சிகாவத்த வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவியை வங்கிகள் வழங்க முடியாத நிலையில் உள்ளதன் காரணமாகவும், ஏனைய சில காரணங்களாலும் இவ்வாறு வாகன உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உதிரிப் பாகங்களின் விலை பாரியளவில் உயர்வு | Prices Of Auto Spare Parts Rise

மேற்குறிப்பிட்ட  காரணங்களால் வாகன உதிரிப் பாகங்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களுக்கு அதிக தட்டுப்பாடு இல்லையென்றாலும், இலங்கையில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஜப்பானிய புதிய மற்றும் பழைய வாகனங்களின் உதிரி பாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

மற்றும், அதன் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு 12,000 – 15,000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட உதிரிபாகங்கள் தற்போது 45,000 – 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button