வாகன இறக்குமதி தொடர்பில் இறக்குமதியாளர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் இறக்குமதியாளர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு | Massive Financial Fraud In Vehicle Imports

உடனடி வாகன இறக்குமதி தொடர்பான வதந்திகளை  இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் மறுத்துள்ளது.

அந்த வகையில் இலகுரக வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும் நடப்பு வருடத்திலோ அல்லது தேர்தலுக்கு முன்னதாகவோ இறக்குமதி செய்யப்படாது என  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தலைவர் பிரசாத் பிரியங்க தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் படி, வாகன இறக்குமதிக்கு குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது ஆகும். இருப்பினும், இறக்குமதியை மீண்டும் தொடங்கும் போது, பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள் முதன்மையாக சுற்றுலா நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதியாக இருக்கும் என்று பிரியங்க கூறியுள்ளார்.

பேருந்துகள், மற்றும் பாரவூர்திகள்; என்பன தமது சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படும்.

இதன்போது அதிகபட்ச இறக்குமதி காலம் ஒரு மாதமாக இருக்கும். மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனினும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களும் அவற்றில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை 18வீதமாக குறைப்பது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது என்றும் என  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் பிரசாத் பிரியங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button