வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.!

இலங்கைக்கு தெற்கே காற்றுச் சுழற்சி ஒன்று உள்ளது. அத்துடன் அரபிக் கடலிலும் காற்று சுழற்சி ஒன்று உள்ளது. அத்துடன் மேடன் யூலியன் அலைவின்(MJO) உள் வருகை காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் வடகீழ் பருவமழையும் தீவிரமடைந்துள்ளது. இவற்றின் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 22.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்பொழுது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக மழையும் கிடைத்து வருகின்றது.குறிப்பாக 19.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கும் வாய்ப்புள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

வடகீழ் பருவமழையின் தீவிரத் தன்மையினை இனிவரும் வாரங்களில் அனுபவிக்க முடியும். நான் முன்னரே குறிப்பிட்டது போன்று நவம்பர் மாதத்தின் 18 நாட்கள் மழை நாட்களாக இருக்கும் என்பது மீளவும் குறிப்பிடக் கூடியது.

தொடர்ச்சியாக எதிர்வரும் 23.11.2024 ஆம் தேதி அளவில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. அது எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மித்த பகுதிகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தாழமுக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button