வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! | Protect Chat Using Secret Code New Whatsappfeature

பயனர்கள் தங்கள் சாதன கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் தங்கள் அரட்டைகளைப் பூட்டி பாதுகாக்கும் வகையில் அரட்டைப் பூட்டு அம்சத்தை வட்ஸ்அப் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது.

ஆனால் இவ்வாறு பூட்டப்பட்ட அரட்டைகள், அரட்டைப் பட்டியலில் தோன்றும் “பூட்டப்பட்ட அரட்டைகள்” என்ற போல்டெர் (Folder) இல் போட்டு மறைக்கப்பட்டன.

அவ்வாறு இருக்கையில் பூட்டப்பட்ட அரட்டை போல்டெர் அரட்டைகள் இரகசியமாக பேணப்படுவதைக் காட்டிக்கொடுக்கும் வண்ணம் அமைந்திருந்ததால் அதில் வட்ஸ்அப் தற்போது புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது.

அதன்படி, பூட்டப்பட்ட அரட்டைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்குவதற்காக அரட்டை பூட்டுக்கான இரகசிய குறியீட்டு அம்சத்தினை வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இரகசியக் குறியீட்டு அம்சத்தின் மூலம், அரட்டைப் பட்டியலில் பூட்டப்பட்ட அரட்டைகளை போல்டரில் இருந்து மறைக்க,வேறுபட்ட கடவுச்சொல்லை அமைக்க முடியும், இதன் மூலமாக வட்ஸ்அப் தேடல் பட்டியில் இரகசியக் குறியீட்டைத் தட்டச்சு செய்வதன் மூலம் மட்டுமே அரட்டையைக் கண்டறியக் கூடியவாறு இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இரகசியக் குறியீட்டை உருவாக்க, எழுத்துக்கள், எண்கள், சிறப்பு எழுத்துகள் மற்றும் ஈமோஜி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

மேலும் பூட்டப்பட்ட மேலும் லாக் செய்யப்பட்ட அரட்டைகளை மறைக்க விரும்பவில்லை என்றால், அவற்றை உங்கள் அரட்டைப் பட்டியலில் கூட தொடர்ந்து வைத்திருக்கலாம்.

அரட்டையின் அமைப்புகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, அரட்டையை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலமும் அரட்டையைப் பூட்ட முடியும் என்பதால், அரட்டையைப் பூட்டுவதை வட்ஸ்அப் எளிதாகவும் வசதியாகவும் மாற்றியுள்ளது.

சீக்ரெட் கோட் அம்சம் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது உலகளவில் கிடைக்கும் என வட்ஸ்அப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button