பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம்!வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம்!வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு | Sri Lanka Women Lawyers Dress Code

பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்காலத்தில் வசதியான ஆடைகளை அணிய நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

உயர்நீதிமன்ற விதிகளின் பிரகாரம், பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், 2023.03.30 அன்று வெளியிடப்பட்டுள்ளதுடன்  புதிய ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வெள்ளை, கறுப்பு, வெளிறிய வெண்மை, சாம்பல் அல்லது ஊதா நிறத்திலான சேலை மற்றும் சட்டை அல்லது வௌ்ளைநிற மேற்சட்டடை, கறுப்புநிற கோற் மற்றும் காலணிகளுடன் கறுப்பு நிற காற்சட்டை அல்லது வௌ்ளைநிற மேற்சட்டடை, கறுப்பு நிற கோற் மற்றும் காலணிகளுடனான கறுப்பு நிற பாவாடை ஆகியவற்றை அணியலாம். காற்சட்டையின் நீளம் கணுக்கால் வரை இருத்தல் வேண்டும்.

பாவாடையின் நீளம் அமரும்போது முழங்காலுக்குக் கீழ் இருத்தல் வேண்டும். மேற்சட்டை கழுத்துவரை அணியப்பட்டு நீண்ட கையுடையதாகவிருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான ஆடைக் குறியீடுகளில் மாற்றம் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button