2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் உலக சம்பியன்கள் பெற்ற பரிசுத் தொகை
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் உலக சம்பியனாக அவுஸ்திரேலியா 6ஆவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது.
இதே வேளை, உலக சம்பியனான அவுஸ்திரேலியா அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
தொடரின் தொடக்கத்தில், வெற்றி பெறும் அணிக்கு இந்த ஆண்டு உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரில் 4 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் இரண்டாம் இடத்துக்கு ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை 2 மில்லியன் டொலர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற மற்றய இரு நாடுகளுக்கும் தலா 800,000 டொலர்கள் பரிசுத் தொகை ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
2023ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரில் 10 நாடுகள் போட்டியிடும், இறுதி ஆரம்ப சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிய மீதமுள்ள 6 நாடுகளுக்கு ஒரு நாட்டுக்கு 100,000 டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இது தவிர, ஒவ்வொரு அணியும் ஆரம்ப சுற்றில் வெற்றி பெற்ற ஒரு போட்டிக்கு 40,000 டொலர்கள் கோரப்பட்டிருந்தது.
அதன்படி, வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி கோரியுள்ள மொத்த பரிசுத் தொகை 4,280,000 டொலர்கள் ஆகும். இது அண்ணளவாக சுமார் 1.4 பில்லியன் இலங்கை ரூபாய் ஆகும்.
2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் முடிவில் ஒவ்வொரு நாடும் கோரும் பரிசுத் தொகைகள் அமெரிக்க டொலர்களிலும் ஆரம்ப சுற்றில் வெற்றி பெற்ற போட்டிகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு,
அவுஸ்திரேலியா (7) – $4,280,000 (இலங்கை நாணயத்தில் 1,378,160,000)
இந்தியா (9) – $2,360,000 (இலங்கை நாணயத்தில் 759,920,000)
தென்னாப்பிரிக்கா (7) – $1,080,000 (இலங்கை நாணயத்தில் 347,760,000)
நியூசிலாந்து (5) – $1,000,000 (இலங்கை நாணயத்தில் 322,000,000)
பாகிஸ்தான் (4) – $260,000 (இலங்கை நாணயத்தில் 83,720,000)
ஆப்கானிஸ்தான் (4) – $260,000 (இலங்கை நாணயத்தில் 83,720,000)
இங்கிலாந்து (3) – $220,000 (இலங்கை நாணயத்தில் 70,840,000)
பங்களாதேஷ் (2) – $180,000 (இலங்கை நாணயத்தில் 57,960,000)
இலங்கை (2) – $180,000 (இலங்கை நாணயத்தில் 57,960,000)
நெதர்லாந்து (2) – $180,000 (இலங்கை நாணயத்தில் 57,960,000)