இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமாக தனி நபர்கள் TIN எனப்படும் வரி இலக்கங்களை பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 9 ஆம் திகதி வரையான தரவுகளுக்கு அமைய ஒரு கோடி 65 ஆயிரத்து 680 பேர் வரி இலக்கங்களை பதிவு பெற்றுள்ளதாக, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் எண்ணிக்கை சுமார் 17 மில்லியனாக உள்ளதாக புள்ளிவிரபங்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் கடந்த மே மாதம் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் TIN எண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 79 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.