இலங்கையை மீட்க இதுதான் இறுதி வழி!
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றம் பலமானதாக இருக்க வேண்டும். அதற்கு தேர்தல் மூலமே தீர்வு காணமுடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா? அல்லது வேறு எதுவும் முறையான தீர்வு உள்ளதா என்பதை பெப்ரவரி மாதத்திற்குள் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.