எரிபொருள் பற்றாக்குறை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ரஷ்யாவில் உள்ள எண்ணெய்யில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு பெறப்படும் டீசலுக்கு தடை விதிப்பது தொடர்பில் ஐரோப்பா பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் டீசல் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அது இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை எட்டியுள்ளது.
அதேவேளை, உலக சந்தையில் வீடிஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.33 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மேலும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.08 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.