ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் ஆரம்பம்.
2022 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்திற்கான போட்டியில் பங்குபற்றும் பத்து அணிகளின் கூட்டம் ஒன்று நேற்று (22) இடம்பெற்றதுடன் போட்டிகளை மார்ச் மாத இறுதியில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்தியாவில் போட்டியை நடத்துவதாக இருந்தால் மும்பைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இரண்டாவது விருப்பம் ஹகமதாபாத் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
மார்ச் மாதத்துக்குள் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், தென்னாப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் இறுதி முடிவு பெப்ரவரி 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இம்முறை ஐ.பி.எல் போட்டியின் வீரர்கள் ஏலம் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
36 இலங்கை வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 1,214 வீரர்கள் போட்டிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஐ.பி.எல் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் போட்டியின் இரண்டாவது சுற்றில் பெங்களூரு அணியை பிரதிநிதித்துவப்படுத்த தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த வருட ஏலத்தில் 10 மில்லியன் வீரர்களில் வனிந்து ஹசரங்கவும் ஒருவர் என்பது விசேடம்ஷமாகும்.