கப்பலின் வால் பகுதியில் தொற்றிக்கொண்டு ஸ்பெயின் வரை பயணித்த புலம்பெயர்ந்தோர்!
பதினோரு கப்பலின் சுக்கான் பகுதியை தொற்றிக்கொண்டு ஸ்பெயின் வரை பயணித்த மூன்று ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர்,
நைஜீரியாவிலிருந்து எண்ணெய் கப்பலின் சுக்கான் பகுதி (Rudder) மீது அமர்ந்தபடி ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் வரை பயணித்த புலப்பெயர்ந்தோரை அந்நாட்டின் ஸ்பெயின் கடலோர காவல்படை மீட்டுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களின் புகைப்படம் திங்கள்கிழமை (நவம்பர் 28) ஸ்பெயின் கடலோர காவல்படையால் பகிரப்பட்டது. அவர்கள் கப்பலின் சுக்கான் பாகத்தில் கடலின் நீர்மட்டத்திற்கு சற்று மேலே அமர்ந்திருப்பதை அந்த புகைப்படம் காட்டுகிறது. இது மிகவும் ஆபத்தானது.
ராட்சத எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் கப்பலான Althini-IIன் கீழ் பகுதியில் அவர்கள் பயணித்துள்ளனர்.
இந்த டேங்கர் கப்பல், நைஜீரியாவில் உள்ள லாகோஸில் இருந்து 11 நாள் பயணத்திற்குப் பிறகு திங்களன்று கிரான் கனாரியாவில் உள்ள லாஸ் பால்மாஸ் வந்தடைந்தது.
மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் துறைமுகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டு சுகாதார சேவைகளால் கவனிக்கப்பட்டதாக ஸ்பானிய கடலோர காவல்படை அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினுக்கு சொந்தமான கேனரி தீவுகள், ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஆப்பிரிக்க குடியேறிகளின் பிரபலமான நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.