காங்கேசன்துறை-நாகப்பட்டினம் படகுச்சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அநடத நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் தலைவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சேவை ஆரம்பிக்கும்போது 36 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட இருவழிக்கட்டணம் பின்னர் 30 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அது குறைக்கப்பட்டு 28 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் எடுத்துச் செல்லும் பயணப்பொதியின் அளவும் 10 கிலோவிலிருந்து 22 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றுலா மேம்பாட்டிற்காக இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்காக 7 வகையான புதிய சுற்றுலாப் பொதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.